நான் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க மாட்டேன்: அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

People voted for only Jayalalithaa in 2011 election: O. Panneerselvam
சென்னை: தனித்து போட்டியிட்டால் நான் கூட வெற்றி பெற மாட்டேன் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் எழுந்து தொகுதி பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். ஆனால் அவற்றை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.

தலைவர் போன்றே

அப்போது அமைச்சர் முனுசாமி சந்திரகுமாரை பார்த்து, முதல்வர் வாக்கு கேட்டதால் தான் இன்று நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். உணர்ச்சி வசப்பட வேண்டாம். உங்கள் தலைவர் போலவே உள்ளீர்கள். தமிழகத்தில் எந்த கட்சியினருக்கும் பாரபட்சம் பார்க்கப்படுவது இல்லை. தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை திமுகவினரின் மனைவியும் தான் வாங்குகிறார்கள். மேலும் நிதியும் சமமாகவே பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்றார்.

ஜெயலிலதா

தேமுதிகவினர் போட்டியிட்ட தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவே இல்லை என்றார் சந்திரகுமார்.

ஓ.பி.

சந்திரகுமார் தப்புத்தாளங்கள் போடுகிறார். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டதாலேயே நீங்களும், நானும் இங்கு அமர்ந்திருக்கிறோம முதல்வருக்காகவே மக்கள் வாக்களித்தனர். தனிப்பட்ட பன்னீர்செல்வத்திற்காகவோ, சந்திரகுமாருக்காகவோ வாக்களிக்கவில்லை என்றார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

அக்கிரமங்கள்

2006ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை, அநியாயங்களை ஜெயலலிதா கட்டுப்படுத்துவார் என்று நம்பிக்கை மக்களிடம் இருந்ததால் தான் அவர்கள் வாக்களித்தனர். நான் தனியாக தேர்தலில் நின்றால் கூட வெற்றி பெற முடியாது என்றார் பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+