மக்கள் நலக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது : வைகோ
கோவை: மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை இன்று சென்னையில் தொடங்க உள்ளதாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் 5 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உடுமலைப்பேட்டையில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட சங்கரை படுகொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2ஜி முறைகேட்டில் தொடர்பில்லை என கூறி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தப்பித்து கொள்ள முடியாது என்றும், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும், ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிப்பதாகவும் வைகோ விமர்சித்தார்.
மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, மக்கள் நலக் கூட்டணியில் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். நான்கு கட்சிகள் சார்பில் அந்த அழைப்பை மீண்டும் கூறி திரும்ப அழைத்திருக்கிறோம். இனி முடிவு எடுப்பது அவர் கையில்தான் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றார்.
இதனிடையே உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவை கோவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications