குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்தால் சசியை மக்கள் விரட்டியடிப்பார்கள்.. அதிமுக எம்.பிக்கள்!
தம்பிதுரையை தவிர அனைத்து எம்பிக்களுக்கும் ஓபிஎஸ்சை ஆதரிப்பார்கள் என நாமக்கல் எம்.பி சுந்தரம் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று ஆதரவு தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரநினைப்பவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டுக்கு நேரில் சென்று தனது ஆதரவுகளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரம் எம்.பி ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தம்பிதுரையை தவிர அனைத்து எம்பிக்களுக்கும் ஓபிஎஸ்சை ஆதரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை எங்களை யாரையும் பார்க்க விடவில்லை என்று கூறி கலங்கினார்.
தொடர்ந்து பேசிய எம்பி அசோக்குமார், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் என்ன குறை கண்டார்கள், ஏன் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறுக்கு வழியில் முதல்வராக வர முயற்சிப்போருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் மட்டுமல்ல எம்பிக்களின் ஆதரவும் பெருகி வருவதால் சசிகலா தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. உடனடியாக போயஸ்கார்டனுக்கு விரைந்த செங்கோட்டையன், சசிகலா உடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications