பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவானின் தந்தை குயில்தாசன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் கடந்த செப்.24-இல் முடிவடைந்த நிலையில் தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவரது பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பேரில் அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications