பேரறிவாளன் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும்... அரசிடம் அற்புதம்மாள் மனு!
பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.
சென்னை : பரோலில் வந்துள்ள தனது மகனின் விடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஒரு மாத பரோல் அளித்தது தமிழக அரசு. தொடர்ந்து மகனின் பரோலுக்காக போராடி வந்த அற்புதம்மாளுக்கு அரசின் திடீர் அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் நிரந்தரமாக விடுதலையளிக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த போதே அற்புதம்மாள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் முடியும் நிலையில் அவரின் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
வீட்டை விட்டு பேரறிவாளன் வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் காரணமாக தொடர்ந்து வீட்டில் இருந்தே அவருக்கு ரத்த மாதிரி சோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரறிவாளன் பரோலில் வந்தது முதல் என்னுடைய கணவரும் மருத்துவ சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்து வருகிறார்.
சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருக்கும் அவரின் உடல்நிலையை மேலும் சரி செய்ய தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சையின் போது மகன் பேரறிவாளன் உடன் இருக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார். எனவே இதனை கருத்தில் கொண்டு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ரத்த மாதிரி சோதனை, தனது கணவரின் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் இத்துடன் இணைத்து அற்புதம்மாள் வழங்கியுள்ளார். எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனின் பரோல் செப்டம்பர்24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications