பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவெடுப்பார்: அற்புதம்மாள்
ஈரோடு: ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், வாக்குமூலம் பெற்றவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால் விடுதலை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அப்போதைய மத்திய அரசாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனது.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்னை நேரில் அழைத்து ஒரு சகோதரிபோல் ஆறுதல் கூறினார். அப்போது பேரறிவாளன் விடுதலையாகுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியாக கூறினார்.
எனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. 7 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த பிறகுதான் அவர் தேர்தலை சந்திப்பார் என்று கருதுகிறேன்.
இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications