பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்ய ஆசை... தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி
பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய விரும்புவதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை : 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திடீர்னு வந்துட்டதால சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒரு மாத கால பரோல் முடிவதற்குள் விடுதலை என்ற செய்தி வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்.
நானும், என் கணவரும் நோயாளிகள் தான் ஆனால் என் மகனை பார்த்துமே உடலுக்கு தெம்பு வந்தது போல இருக்கிறது. என்றாலும் இனி தான் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்க வேண்டும், என் மகனுக்கும் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வந்த பரபரப்பில் இருக்கிறோம், இன்னும் அந்த பரபரப்பு எனக்கு அடங்கவில்லை.

திக்கு முக்காடிய தாய்
27 வருடங்களாக போராடுகிறேன் இரண்டு முறை ஜெயலலிதாவினால் விடுமுறை என்று சொல்லி தடைபட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால் 27 வருடம் ஓடிவிட்டது. அதனால் தான் நேற்று கூட நான் சொன்னேன், என் மகன் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் தான் நம்புவேன் என்று அவன் வந்த பிறகு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

சேர்ந்து இருக்கப் போகிறோம்
எங்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியில் அவனுக்கும் தூக்கம் வரவில்லை, இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம். குழந்தைகளாக இருந்த போது நாங்கள் இந்த வீட்டில் ஒன்றாக இருந்தோம் இப்போது மீண்டும் வந்திருக்கிறான். என் சின்ன மகளும் வந்தவிடுவாள் நாங்கள் எல்லோரும் இந்த வீட்டில் ஒன்றாக இருக்கப் போகிறோம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணம் செய்ய ஆசை
19 வயதில் விசாரணைக்காக அழைத்து சென்றனர், ஆனால் இத்தனை ஆண்டுகள் இளமை காலத்தை சிறையிலேயே கழித்துவிட்டான். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் அவன் வந்துள்ளான், அவனை வெளியே அழைத்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் அவனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.
கவலை
என் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன், பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டேன். ஆனால் என் ஒரே மகன் வாழ்க்கையை வாழவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. இனி வரும் கால சூழலை பொறுத்து அடுத்த கட்ட ஏற்பாடுகளை செய்ய நான் திட்டமிட்டுள்ளேன் என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications