பேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிறுநீரக நோய் தொற்று சிகிச்சை
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, வேலூர் மருத்துவமனையில் இன்று சிறுநீரக நோய் தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டது
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.

வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால், அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார்.
இதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான மருந்துகளை பேரறிவாளன் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இன்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வேலூர் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சிறையில் இருந்து பேரறிவாளனை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு சிறுநீரகப் பிரிவு, எலும்பு தேய்மான பிரிவு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலக்குறைவாக இருக்கும் தனது தந்தையை பார்க்க பரோல் கேட்டு பேரறிவாளன் மனு கொடுத்துள்ளார். விரைவில் பரோல் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருப்பதாக அவரை சந்தித்தவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications