சென்னை வந்த பெரியபாண்டியனின் உடலை டிவியில் பார்த்து கதறும் சொந்த ஊர் மக்கள்!
சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை உறவினர்கள் டிவியில் பார்த்து கதறி வருகின்றனர்.
சென்னை: விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை உறவினர்கள் டிவியில் பார்த்து கதறி வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டி நேற்று அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இன்று தமிழகம் வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொலைக்காட்சிகள் நேரலை
இதைத்தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், காவலர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை சில தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிப்பரப்பின.

கார்கோ விமானம் மூலம்
பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணி வரை விமான நிலையத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கார்கோ விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

டிவியை வைத்து பார்க்கின்றனர்
அங்கிருந்து பெரியபாண்டியின் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. உடல் இன்னும் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாத நிலையில் பெரியபாண்டி குறித்த தகவல்களை அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு டிவியை வைத்து பார்த்து வருகின்றனர்.

கதறும் உறவினர்கள்
சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியபாண்டியின் உடலை தொலைக்காட்சிகளில் பார்த்து சொந்த ஊரில் உள்ள அவரது உறவினர்களும் கிராம மக்களும் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.

காத்துக்கிடக்கும் மக்கள்
பெரியபாண்டியின் உடலுக்கு இன்று மாலையே இறுதிச்சடங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியபாண்டியின் இறுதிச்சடங்கில் பங்பேற்பதற்காக மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் வந்து காத்துக்கிடக்கின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications