இந்தி திணிப்பு, பெரியார்: ‘ஆரி­ய­மாலா’ நிர்­மலா சீதா­ரா­மன்... சரமாரியாக விளாசிய திமுக முரசொலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் தந்தை பெரியார் மற்றும் திமுகவை விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை 'ஆரி­ய­மாலா’ 'வித்­து­வா­மி­சினி’ என்கிற புனைபெயர் சூட்டி கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளேடு.

திமுகவின் முரசொலி நாளேட்டில் முதுபெரும் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை:

'தமி­ழர்­களை அநா­க­ரி­க­மா­ன­வர்­கள்’ என்று கடந்த 10 ஆம் தேதி மக்­க­ள­வை­யில் மத்திய அர­சின் கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பேச்­சி­னூடே குறிப்­பிட்­டார். உடனே தனது போர்க்­கு­ரலை உயர்த்தி எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னார் கனி­மொழி கரு­ணா­நிதி. இத­னால் நாடா­ளு­மன்­றத்­தில் 100 முறை வேண்­டு­மா­னா­லும் மன்­னிப்­புக் கோரு­கி­றேன் எனப் பேசி­னார் பிர­தான். இந்த விவ­கா­ரத்­தில் 'வித்­து­வா­மி­சினி’ 'ஆரி­ய­மாலா’ நிர்­மலா சீதா­ரா­ம­னால் சும்மா இருக்­க­மு­டி­யுமா? திரு­வாய் மொழி­யைப் பொழிந்­தார்.

பெரியாரைத் தாக்கி பேசிய நிர்மலா சீதாராமன்

மக்­க­ள­வை­யில் பெரி­யா­ரைத் தாக்­கிப் பேசி­னார். அவர் பேசி­ய­தா­கச் சில மேற்­கோளை எடுத்து காட்டி இருக்­கி­றார். அவற்­றை­யெல்­லாம் வரி­சைப் படுத்தி மீண்­டும் நாம் இங்கே சொல்­ல­வி­ரும்­ப­வில்லை. கட்­டு­ரை­யின் வேறு இடத்­தில் சொல்­வோம். 'ஆரி­ய­மாலா’ நிர்­ம­லா­வின் நோக்­கம் பெரி­யார் தமி­ழை–­த­மி­ழ­ரைக் காட்­டு­மி­ராண்­டி­கள் என்று சொல்லி இருக்­கி­றார். அதைப் போல தர்­மேந்­திர பிர­தான் தமி­ழர்­களை 'நாக­ரி­க­மற்­ற­வர்­கள்’ என்று கூறு­கி­றார். பெரி­யாரை வழி­ப­டு­கி­றீர்­கள். பிர­தானை எதிர்க்­கி­றீர்­கள் என்­பது ஆரி­ய­மா­லா­வின் கருத்து; வாதம்.

வேறுபாடு தெரியாதா?

பெரி­யார் தமி­ழர்­களை கூறி­ய­தன் நோக்­கம், என்ன? தர்­மேந்­திர பிர­தான் ஆதிக்க வசப்­பட்டு கோபத்­தோடு சொல்­வ­தன் நோக்­கம் என்ன? இரண்­டுக்­கும் வேறு­பாடு இருக்­கி­றது. பெரி­யார் கூறி­ய­தன் நோக்­கம் தமி­ழர்­களை உலக மாந்­தர்­க­ளாக ஆக்க வேண்­டும். அறி­வுள்­ள­வர்­க­ளாக தன்­மா­னம் உள்­ள­வர்­க­ளாக மாற்ற வேண்­டும். தமிழ்­மொழி அதற்கு ஏற்­ற­தாக இருக்க வேண்­டும். தமி­ழும் தமி­ழர்­க­ளும் அதற்­கேற்ப வளர வேண்­டும் என்று கரு­தித்­தான் சொன்­னார்.

ஆணவத்தோடு பேசிய பிரதான்

பிர­தான் எதற்­கா­கச் சொல்­கி­றார்? புதிய தேசி­ய­கல்­விக் கொள்­கையை ஏற்க வேண்­டும் என்­ப­தற்­காக மன்­னர் கால ஆண­வத்­தோடு தனக்கு அடங்­கிய 'இராஜ்ய பிர­தி­நி­தி­க­ளை’ப் பார்த்து 'அநா­க­ரி­க­மா­ன­வர்­கள்’ என்று சொல்­கி­றார். இது இரண்­டும் எப்­படி ஒன்­றா­கும்?

ஆரியமாலா நிர்மலா சீதாராமன்

இது 'வித்­வா­மி­சினி’ 'ஆரி­ய­மாலா’ நிர்­மலா சீதா­ரா­ம­னுக்­குத் தெரி­யாதா? தெரி­யும். பிர­தான் மாட்­டிக் கொண்­டார். அவை­யி­லேயே பேச்­சைத் திரும்­பப் பெற்­றுக் கொண்­டார். மன்­னிப்­பை­யும் கோரி­னார். இந்­தி­யாவை ஆரிய வர்த்­த­மாக்க முனைய வந்­த­வ­ருக்கு துணை நிற்­கும் 'ஆரி­ய­மாலா’ நிர்­மலா சீதா­ரா­மன் பெரி­யா­ரின் தமிழ், தமி­ழர் பற்­றிய கருத்­து­களை எடுத்து வைத்து குழப்­பம் செய்­கி­றார். அதற்கு 1967 ஆம் ஆண்டு இந்து ஆங்­கில இத­ழைச் சான்று காட்­டு­கி­றார்.

வரலாறுதான் என்ன?

அதில் தெ.பொ.மீ.யின் எதிர்ப்­பைச் சொல்­லு­கி­றார். தெ.பொ.மீனாட்சி சுந்­த­ர­னார் திரா­விட இயக்க எதிர்ப்பு மாநாட்டை நடத்­தி­ய­வர். அவர் பெரி­யாரை ஆத­ரிப்­ப­வரா? திரா­வி­ட­இ­யக்க எதிர்ப்­பா­ளர் ஆயிற்றே. அவர் பெரி­யா­ரின் கருத்தை எதிர்க்­கா­மல் எப்­படி இருப்­பார்? தனி நாய­கம் அடி­கள் பெரி­யா­ரின் கருத்­தைச் சொந்­தக் கருத்து என்று சொல்­கி­றாரே தவிர அந்­தக் கருத்­துப் பற்றி ஆய்­வுரை செய்து எந்த மதிப்­பீட்­டை­யும் வழங்­க­வில்லை.

அறி­ஞர் அண்­ணா­வின் கருத்­தா­கச் சொல்­லப்­பட்டு உள்­ள­தில் பெரி­யா­ரின் உள்­ளீடு தெரி­கி­றது. அவ்­வ­ளவே. நிர்­ம­லா­வின் சான்று நிற்­க­வில்­லையே. பெரி­யார் சுதந்­தி­ரச் சிந்­த­னை­யா­ளர். அவர் என்ன?– கத்­துக்­குட்டி அண்­ணா­ம­லையா? அவர் ஏற்­றுக் கொண்ட கொள்­கை­க­ளுக்­காக உண்­மை­யாக இருந்­த­வர். உழைத்­த­வர்.

நிர்மலாக்களின் தாத்தாக்களை சந்தித்தவர்

நிர்­ம­லாக்­க­ளின் தாத்­தாக்­க­ளைச் சந்­தித்­த­வர். பெரி­யா­ரைப் பற்றி மோடி பேச­வில்லை. அமித்ஷா பேச­வில்லை. தென்­ன­கத்­தில் பிறந்த 'ஆரி­ய­மாலா’ பேசு­கி­றார். ஆரிய மறை­க­ளுக்கு உரை பிறந்த இடம் தென்­ன­கம்! சாய­ணர் உரை வரைந்­தார். அந்த நீட்­சி­தானே நிர்­மலா சீதா­ரா­மன்!

ஆகவே நிர்­மலா எடுத்­துக் கொடுத்து காப்­பாற்ற முன் வரு­கி­றார். பெரி­யா­ரின் கருத்தை மேலோட்­ட­மா­கப் பார்த்­தால் தமிழ், தமி­ழர்­கள் எதிர்ப்பை அவர் வெளிப்­ப­டுத்­து­வது போல்­தான் தோன்­றும். ஆனால் அது அத்­த­கை­யது அல்ல என்று கனி­மொழி 'ஆரி­ய­மாலா’ நிர்­ம­லா­வுக்கு பதில் அளித்து இருக்­கி­றார்.

திராவிடத்தின் நீலகேசி கனிமொழி

கனி­மொழி கரு­ணா­நிதி திரா­விட இயக்­கத்­தின் நீல­கேசி. மிக அழ­காக பதில் சொல்லி இருக்­கி­றார். ஒரு சூத்­தி­ரத்­தைப் போல்– நூற்­பா­வைப் போல் பதில் சொல்லி இருக்­கி­றார். அவர் கூறிய பதி­லில் பெரி­யா­ரின் உள்­ளொ­ளித் தெரி­கி­றது. அது வரு­மாறு:–

“பெரி­யார் எதற்­கா­கச் சொன்­னார் என்­பதை அம்­மை­யார் நிர்­மலா சிதா­ரா­மன் புரிந்து கொள்ள வேண்­டும். அறி­வி­யல் விஷ­யங்­கள் உல­கம் முழு­வ­தும் பர­வும் புதிய விஷ­யங்­கள் தமி­ழக மாண­வர்­க­ளுக்கு வந்து சேர வேண்­டும் என்­ப­தற்­காக பழம் பெருமை பேசிக் கொண்டு இருக்­கா­தீர்­கள். புதிய விஷ­யங்­க­ளைக் கொண்டு வாருங்­கள் என்ற ரீதி­யில் பெரி­யார் பேசி இருக்­கி­றார். இதனை நிர்­மலா சீதா­ரா­மன் புரிந்து கொள்­ள­வில்லை.

“அவர் புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழி­யில் சொல்ல வேண்­டு­மா­னால். 'மெல்­லத் தமி­ழினி சாகும் என்று ஒரு பேதை உரைத்­தான்’ என பார­தி­யார் கூறி­யது போன்ற அக்­க­றையை பெரி­யார் வெளிப்­ப­டுத்­தி­னார்.

நிர்மலாவுக்கு புரிதல் வேண்டும்

தந்தை பெரி­யார் பேசு­வ­தற்­கும் இன்­னொரு மாநி­லத்­திலே இருக்­கக் கூடிய ஓர் அமைச்­சர் தமி­ழர்­க­ளைப் பார்த்து பேசு­வ­தற்­கும் வித்­தி­யா­சம் இருக்­கி­றது என்­பதை அவர் புரிந்து கொள்ள வேண்­டும்.அவ­மா­னப் ­ப­டுத்­து­வ­தற்­கும் அக்­கறை கொள்­வ­தற்­கும் வித்­தி­யா­சம் இருக்­கி­றது.”

பெரி­யா­ரின் சிந்­தனை பாதிப்­புக்கு ஆளா­ன­வர் ­க­ளும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் சூத்­திர, அவர்­ணஸ்­தர்­க­ளும் கேட்­கி­ற­போதே, படிக்­கி­ற­போதே கிளர்ச்­சிக்­கு­ரி­ய­வர்­க­ளாக ஆகி­யி­ருக்­கி­றார்­களே, அது ஏன்?

தந்தை பெரியார் யார் தெரியுமா?

மதத்­தால்,மொழி­யால் ஒரு பழம் பெரும் இனம் சிக்­குண்டு இருப்­பதை அடை­யா­ளம் கண்டு தட்டி எழுப்பி'நெருப்­பி­னில் தமிழ் செய்து நீசர் முன் வைத்­த­வர்’பெரி­யார். பெரி­யார் தமி­ழர்­க­ளுக்­கா­கச் சொன்­னதை எடுத்து வைத்­துக் கொண்டு நிர்­ம­லாக்­கள் ஏன் கொதிக்க வேண்­டும்? புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­சன் பெரி­யார் பேச்சை எழுத்தை முதன் முத­லாக கேட்­டும் படித்­தும் உணர்ந்த போது அதிர்ந்து போனார்.'எம்­பெ­ரு­மான் இம­ய­ம­லை­யையே இல்லை என்­கி­றாரே’என்று வியந்து இருக்­கி­றார். இது­வரை நாம் கேட்ட மலைப்­போன்ற கருத்­து­களை மறுக்­கி­றாரே என்­கி­றார்.

ஆரியமாலா நிர்மலா சீதாராமன் அறிவாரா?

அறி­ஞர் அண்ணா அவர் பேச்­சைக் கேட்­ட­போது 'திகைக்க வைக்­கி­றாரே’, 'திடுக்­கிட வைக்­கி­றாரே’ என்று பேசி­னார். கல்­லூரி காணாத அந்­தக் கிழ­வரை தலை­வ­ராக நான் கண்­ட­தும் கொண்­ட­தும் அவர் ஒரு­வ­ரைத்­தான் என்று கூறி­னார்.

சூத்­தி­ர­னாய், அவர்­ணஸ்­தர்­க­ளாய் ஆக்­கப்­பட்­ட­வர் களுக்­குத்­தான் அந்த வலித் தெரி­யும். 'வித்­து­வா­மி­சினி’ 'ஆரி­ய­மாலா’ நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு எப்­ப­டித்­தெ­ரி­யும்.? 'ஆரி­ய­மாலா’ நிர்­ம­லா­வின் பார்­வைக்கு பெரி­யார் தமி­ழைப் பற்­றிக் கூறிய அவ­ரின் ஒரு சில கூற்­றைப் பாருங்­கள்.

பெரியாரும் தமிழும்

(1) நான் தமிழை எதற்­கா­கக் குறை கூறு­கி­றேன் என்­றால் அது மனி­தன் காட்­டு­மி­ராண்­டி­யாக இருந்த காலத்­தில் ஏற்­பட்ட மொழி. படிப்­ப­றிவு இல்­லா­த­வர்­க­ளால் ஏற்­ப­டுத்­த­ப­பட்ட மொழி. மனி­தன் பண்­ப­டா­மல் இருந்­த­போது ஏற்­பாடு செய்து கொண்ட மொழி என்­ப­தோடு நம் வளர்­சிக்­கும் அதில் வழி­யில்லை;விஞ்­ஞான முன்­னேற்­றத்­திற்கு அத­னால் பய­னில்லை. மற்ற மொழி­க­ளி­லி­ருந்து மொழி பெயர்த்து அதன் மூலம் நாம் முன்­னே­றி­னால்­தான் உண்டு என்­கிற நிலை­யில் தமிழ் மொழி இருப்­ப­த­னா­லேயே ஆகும்.” (விடு­தலை 03.05.1971 )

(2) தமி­ழில் ஆரி­யம் புகுந்­த­தால்­தான் காட்­டு ­மி­ராண்­டித் தனம் புகுந்­து­விட்­டது. இதில் பண்­டி­தர்­கள் கவ­னம்செலுத்த வேண்­டாமா? கவலை எடுத்­துக் கொள்ள வேண்­டாமா? வெளி­நாட்டு மக்­கள் எல்­லாம் காட்­டு­மி­ரண்­டி­க­ளாக வாழ்ந்த காலத்­தில் கப்­ப­லோட்டி கடல் கடந்து வாணி­பம் நடத்­திய தமி­ழர்­க­ளின் மர­பில் இன்று ஒரு நியூட்­டன் தோன்­ற­வில்லை. ஒரு எடி­சன் தோன்­ற­வில்லை. ஒரு மார்­கோணி தோன்ற முடி­ய­வில்­லையே என்­பதை அறிந்து கொள்ள வேண்­டாமா?” – விடு­தலை (05.01.1968)

(3) “ஆங்­கி­லம் வளர்ந்த மொழி; விஞ்­ஞான மொழி என்­ப­தும் தமிழ் வளர்ச்சி அடையா பழங்­கால மொழி என்­ப­தும் என்­னு­டைய மதிப்­பீடு ஆகும். இதை நான் சொன்­ன­தற்­கான முக்­கிய நோக்­கம் தமிழ்­மொழி ஆங்­கில மொழி அள­வுக்கு விஞ்­ஞான மொழி­யா­க­வும் பகுத்­த­றிவு மொழி­யா­க­வும் ஆக­வில்லை என்­ப­து­தானே தவிர தமிழ் மீது எனக்­குத் தனி­வெ­றுப்பு இல்லை.”

பாவேந்தர் கவிதை

பெரி­யா­ரின் கருத்தை புரட்­சிக் கவி­ஞ­ரின் கவி­தை­யில் மொழி­யின் பழ­மை­யைக் கீழ்க்­கா­ணும் கவிதை வரி­க­ளில் காணு­கின்­றோம்.

“திங்­க­ளொ­டும் செழும்­ப­ரிதி

தன்­னோ­டும் விண்­ணோ­டும் உடுக்­க­ளோ­டும்

மங்­குல் கடல் இவற்­றோ­டும்

பிறந்த தமி­ழு­டன் பிறந்­தோம்”

இந்­தக் கவி­தை­யின் பொருளை பெரி­யார் தமது மொழி­யில் சொல்­கி­றார்.

பெரியாரின் விமர்சன பார்வை ஏன்?

இப்­ப­டிப்­பட்ட கருத்­து­க­ளைப் பெரி­யார் சொன்­ன­தற்­குக் கார­ணம் அம் மொழிக்­கு­ரி­ய­வர்­கள் அனைத்­துத் துறை­யி­லும் முன்­னேற மொழி அனைத்து கலை­க­ளை­யும் பெற்று உய­ர­வேண்­டும் என்­பதே ஆகும். அறி­ஞர் அண்ணா பெரி­யா­ரின் இத்­த­கைய விமர்­ச­னங்­களை 'பூனை தன் குட்­டி­யைக் கவ்­விக்­கொண்டு செல்­வது போல’ என்று குறிப்­பி­டு­வார்.

தர்­மேந்­திர பிர­தான் குறிப்­பிட்ட அநா­க­ரி­கம் அத்­த­கைய தன்­மை­யு­டை­யது அல்ல. அதற்­குச் சப்­பைக் கட்­டுக்­கட்­டும் 'வித்­து­வா­மி­சினி’ நிர்­மலா சீதா­ரா­மன் பெரி­யார் கருத்தை வேறு­வித விளக்­கம் கூறி குழப்­பதை விதைக்­கி­றார்.

பிரதானின் நோக்கமே வேறு

பிர­தான் கூறி­ய­து­வேறு நோக்­க­மு­டை­யது. பெரி­யார் கூறி­யது மொழி, இனம், நாடு முன்­னே­றும் நோக்­கம் கொண்­டது. ஆக­வே­தான் திரா­விட இயக்­கத்­தின் நீல­கே­சி­யான கனி­மொழி கரு­ணா­நிதி'அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­தற்­கும் அக்­கறை கொள்­வ­தற்­கும் வித்­தி­யா­சம் இருக்­கி­றது’என்று நறுக்­குத் தெறித்­தது போல் கூறி இருக்­கி­றார். ஆகவே இந்­தச் சர்ச்­சை­க­ளின் மூலம்; கனி­மொழி அறி­வுக்­கொ­டியை உயர்த்­தி­னார். நிர்­மலா சீதா­ரா­மன் அறி­யா­மையை வெளிப்­ப­டுத்­தி­னார்.

பா.ஜ.க.நாடு தழுவி திரா­விட இயக்­கத்­தோடு ஒரு கருத்­தி­யல் போர் நடத்திவரு­கி­றது. எதிர் கொள்­வோம்; முன்­னே­று­வோம். இவ்வாறு திமுகவின் முரசொலி நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+