வேடிக்கை பார்க்க வந்த புஸுபுஸு காஸ்ட்லி பூனை.. உரிமையாளர் அதிர்ச்சி.. கோவையில் நடந்தது என்ன?
கோவை: கோவையில் அதிக விலையுள்ள பூனையை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வருகிறார்கள்.
வீடுகளில் பலர் செல்லபிராணிகளை வளர்த்து வருகிறார்கள். நாய், பூனை, பறவைகள், முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்க்கிறார்கள். நாய், பூனை, பறவைகள் மிக அதிக விலைக்கு கூட விற்கப்படுகின்றன.
நாய் என்றால் தெருநாய் முதல் ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் நாய்கள் வரை உள்ளன. இதை அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்கிறார்கள். அது போல் பறவைகளில் கூட எக்ஸாடிக் பறவைகள், அதாவது தனித்துவமான வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பறவைகளும் உள்ளன.

அவை செய்யும் குறும்புத்தனத்தை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். பூனையிலும் ஒஸ்தியான காஸ்ட்லி பூனைகள் உள்ளன. இந்த நிலையில் வீதியில் செல்லும் விளையாடும் செல்லப்பிராணிகளை சிலர் காசு கொடுத்து வாங்க முடியாமல் திருடிச் செல்கிறார்கள். இப்படி ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவை கணபதி நகர் வெற்றி விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த சாய்சங்கர்.
இவர் அப்பகுதியல் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் விஜய் வைத்திருப்பதை போன் பெர்சியன் பூனையை வாங்கி வளர்த்து வந்தார். அதை அவர் ரூ 12 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தார். வெள்ளை நிறத்தில் இருந்த அந்த பூனை வழக்கமாக வீட்டிற்கு வெளியே வந்து நிற்குமாம். ஆனால் கடந்த 13-ஆம் தேதி அந்த பூனையை காணவில்லை.
இதனால் உரிமையாளர் சாய்சங்கர் அதிர்ச்சி அடைந்தார். எங்கு தேடியும் அந்த பூனையை கிடைக்கவில்லை. இதையடுத்து சாய்சங்கர் சரவணப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு காட்சியில் பூனை திருடியவர்கள் குறித்து பதிவாகியிருந்தது.
அந்த வீட்டு வாசலில் பூனை விளையாடிக் கொண்டிருக்கிறது. இதை மர்ம நபர்கள் தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஓட்ட, மற்றொருவர் அந்த பூனையை பிடித்துக் கொண்டு செல்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications