இலங்கை அகதிகள் முகாம்மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீச்சு.. அதிரடிப்படையினர் குவிப்பு
கோவை மாவட்டம் பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் மீது இந்துமுன்னணி அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து போலீசார் தரப்பில், " பூளுவப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை கைப்பந்து விளையாடிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாகச் சென்ற காளப்பாளையத்தை சேர்ந்த சிவா என்பவர் இளைஞர்களின் தகராறை விலக்கி, அவர்களைக் கண்டித்துள்ளார்.

இதில் சிவாவிற்கும் அவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவாவுக்கு ஆதி விழுந்துள்ளது. அதனைக் கேள்விப்பட்ட சிவாவின் மகன் சுரேந்திரராஜா கொந்தளித்துள்ளார். உடனே அவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் சிலருடன் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று, சிவாவை தாக்கியதைப் பற்றி விசாரித்துள்ளார்.
இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இத்தகராறில் காயமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரமேஷ் குமாரையும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமனையும் கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் ஆலாந்துறை காவல்துறையினர் இருதரப்பைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். முகாமைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications