கல்பாக்கம் ஈசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி படுகொலை!
கல்பாக்கம்: கல்பாக்கம் அருகே ஈசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டுள்ளனர்.
கல்பாக்கம் அருகே காத்தான்கடையில் பெட்ரோல் பங்க் வைத்திருந்தவர் மோகன்ராஜ் (50). இவரது வீடு கூவத்தூரை அடுத்த பேட்டையில் உள்ளது. இவர் தினமும் இரவு 11 மணிக்கு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.

அது போல் நேற்று இரவு 11 மணிக்கு பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இதை அறியாமல் மோகன்ராஜ், எப்போதும் போல் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இடத்தில் திடீரென மோகன்ராஜை மர்மநபர்கள் வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், தப்பியோட முயன்ற போது மறைத்து வைத்திருந்த கத்தியால், மோகன்ராஜை, மர்மநபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மகும்பலை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications