பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு.. இன்று காலை முதல் அமல்
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வந்தன.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வந்த நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 67.42க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ57.03 க்கு விற்பனை செய்யப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications