எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீச்சு.. சேலத்தில் பரபரப்பு
சேலம்: தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த பெட்ரோல் பாக்கெட்டுகளை மேடை மீது வீசினார். அந்த பாக்கெட் மேடை முன்பு வைக்கப்பட்டிருந்த (ஆம்ப்ளிஃபியர்) மீது விழுந்து தீப்பற்றியது.

உடனடியாக அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அங்கு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு புறப்பட்டார்.
கைதான நபரிடம் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து ஜலகண்டாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது. ஆளும் கட்சி பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications