For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை: அமித் ஷாவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பாஜக தலைவர் அமித் ஷாவை கிண்டல் செய்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.31க்கும், டீசல் ரூ. 78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Petrol price: P. Chidambaram mocks Amit Shah

தினமும் காலையில் எழுந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்தியை பார்த்து வாகன ஓட்டிகள் கவலை அடைகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் எரிபொருள் விலையை கட்டப்படுத்த அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் அவரை ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இது குறித்து சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்கிறது அரசு. ஆனால் பாஜக தலைவரோ, எரிபொருள் விலையை மத்திய அரசு விரைவில் கட்டுப்படுத்தும் என்கிறார். கச்சா எண்ணெய்யை இலவசமாக வழங்கும் கச்சா எண்ணெய் இடத்தை பாஜக கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Senior Congress leader P. Chidambaram has mocked BJP president Amit Shah by tweeting, "Government says will not cut fuel prices. BJP President says 'Centre will soon arrest fuel prices'. BJP must have found a crude oil source that will supply crude oil free!"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X