பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது !

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.

 Petrol rate 89 paisa hiked from today midnight

அந்த வகையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

புதிய விலை உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.13க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டீசல் விலை லிட்டர் ரூ.58.02க்கு விற்பனை செய்யப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+