பீடா கடையில் பைப் வெடிகுண்டு... மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை பீடா கடையில் மர்மநபர் ஒப்படைத்த பையில் பைப் வெடிகுண்டு இருந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை கீழவெளி வீதியைச் சேர்ந்தவர் பரீத்கான் (33). இப்பகுதியில் தனியார் ஒட்டல் அருகே பீடா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து ‘10 பீடா போடுங்கள்' என்று ஆர்டர் கொடுத்துள்ளார்.
பின்னர், அருகில் உள்ள கடைக்கு போய் விட்டு வருவதாக கூறி, ஒரு பிளாஸ்டிக் கேரி பையில் வைத்திருந்த அட்டை பெட்டியை கடையில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். இரவு 11 மணியாகியும் அவர் வராததால், சந்தேகம் அடைந்த கடைக்காரர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சோதனையில் அதில் பைப் வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications