சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்
சேலம்: சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனகூறி மாற்று பாதை அமைக்கக் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பியூஸ் மனுஷிக்கு ஜாமின் கேட்டு அவரது மனைவி மோனிகா சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஷேசசாயி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பியூஸ் மனுஷ் வழக்கறிஞர் ப.பா.மோகன், அரசு வழக்கறிஞர் தனசேகரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.
அப்போது, பியூஸ் மனுஷ் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆதரவு நாட்டிற்கு தேவை. தனிமனிதனாக இது போன்ற பிரச்சனைகளில் போராடினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. சமூக அமைப்புகள், முற்றுகை போராட்டம், சாலை மறியல் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடும் சமயத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம், பேரணி போன்ற அறவழிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
முதலில் பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம். தனிமனிதனாக ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து, பியூஸ் மனுஷிக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பியூஸ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும்வரை தினமும் 2 முறை நீதிமன்றத்தில் காலை, மாலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து நாளை சிறையில் இருந்து பியூஷ் வெளிவருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications