சவுதியில் தவிக்கும் கணவர்கள்... மீட்டுத் தரக் கோரி கலெக்டரை மனுவுடன் சந்தித்த 2 பெண்கள்!
மதுரை: சவுதி அரேபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இன்றி கொத்தடிமைகளாக தவிக்கும் தங்களது கணவர்களை மீட்டுத்தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு பெண்கள் மனு அளித்துள்ளனர்.
வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்ற தமிழகப் பெண் ஒருவர், அங்கு முதலாளியால் கை வெட்டப்பட்டு ரியாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, வெளிநாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழும் தங்களது கணவர்களை மீட்டுத் தரக்கோரி இரண்டு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார், ஜெயராம். சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வரும் இவர்களது மனைவிகளான, சிவக்குமாரின் மனைவி போதும்பொண்ணு, ஜெயராமனின் மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் கணவர்கள் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றனர். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியதால் அங்கு போனார்கள். ஆனால் அங்கே சம்பளம், உணவு இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக டெலிபோன் மூலம் எங்களிடம் தெரிவித்தார்கள். மேலும் அவர்களது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை எனவும் அழுதபடி கூறினார்கள். எனவே இருவரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications