அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை... 38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி: செந்தில் பாலாஜி மீது புதிய புகார்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 2 மேலாண்மை இயக்குநர்கள் மீது வழக்கு பதியக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 -2016 ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி; அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட செயலராகவும் இருந்து வந்தார். ஆட்சி முடியும் தருணத்தில் அவரது அமைச்சர் பதவியும் கட்சிப்பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பலரும் புகார் அளித்தனர்.

செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வழங்குவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, கடந்த மார்ச் மாதம் 48 பேர் போலீசில் புகார் அளித்தனர். ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு, 3 லட்சம் ரூபாய்; மெக்கானிக் பணிக்கு, 6 லட்சம் ரூபாய் என 3 கோடி ரூபாய்வரை வசூலித்ததாகவும் பணி ஆணை வழங்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் சில தினங்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்துள்ளார்.
காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிகிறேன். 2014ல் அப்போதைய காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பாபு, அரசு போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர், அலுவ லக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு புதி தாக ஆட்கள் தேர்வு செய்யப் படுவதாகவும், அப்போதைய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பணம் வழங்கினால் வேலை கிடைக்கும் என என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசு வேலை தேடிக்கொண்டு இருக்கும் எனது நண்பர்களிடம் தெரிவித்ததுடன், அவர்களை மேலாண்மை இயக்குநர் பாபுவிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களிடம் என்னுடைய வங்கிக் கணக்கை வழங்கிய பாபு, அந்த கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பி எனது வங்கிக் கணக்கில் 38 பேர் அவ்வப்போது பணம் செலுத்தினர். அந்தப் பணத்தை எடுத்து பாபுவிடம் வழங்கினேன். பாபு ஓய்வு பெறும் வரை அவரிடம் ரூ.60 லட்சம் வழங்கினேன். அவர் ஓய்வுக்கு பிறகு மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்ற ரங்கராஜ் என்னிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பாபு சார்பில் பணி நியமனம் பெற்றுத் தருவது எனது பொறுப்பு என்றார். ஆனால் அவர் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை.
தமிழகத்தில் 2011 முதல் 2016 வரை போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி உடன் பாபு, ரங்கராஜ் ஆகியோரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி சிவகங்கை போலீஸாரிடம் 25.7.2016ல் புகார் அளித்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லை. எனது புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்! -
கரூர் கூட்ட நெரிசல்! திட்டமிடப்பட்ட சதியா? செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் தொடர்ந்த சிபிஐ விசாரணை -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications