பிளஸ்- 1 பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் கோவை மைதானத்தில் போலீஸ் குவிப்பு
கோவை: பிளஸ் 1க்கு பொது தேர்வு என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலையடுத்து, இன்று வ.உ.சி. மைதானம் முன்பு நூறுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், 'சேவ் பிளஸ் 1 ஸ்டூண்டன்ஸ்' என்ற பெயரில் பல்வேறு வெப்சைட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரசுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இது வாட்ஸ் அப்பிலும் வைரலாக பரவியதால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் குறித்து தகவல் தெரிந்து கொண்டபோலீசார் முன்னெச்சரிக்கையாக வ.உ.சி. மைதானத்தில், நூற்றுக்கணக்கில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் திரண்டால் அவர்களை கலைப்பது சிரமம் என்பதால், அவர்களை கூடவிடாமல் முன்கூட்டியே தடுத்து நிறுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, வ.உ.சி மைதானத்தில் பல ஆயிரம் பேர் மாணவர்கள் திரண்டனர். தற்போது, பிளஸ் 1 மாணவர்களின் போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications