அரூர்: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூரில் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவியின் வீட்டை பரிசோதனை செய்த போலீசார், தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிவைத்த கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் உடற்கல்வி ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வேலூர் அருகே அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தங்கம்மாள் (14) பயிற்சி ஆசிரியரின் பாலியல் தொல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியைகளே தலைமை ஆசிரியருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். கொளத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஏ.சாந்தி, கே.சி.கவிதா உள்பட ஏழு ஆசிரியைகள் தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தாங்காமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications