ஏப். 8ல் விபத்தில் இறந்த பிளஸ் 2 மாணவர் முகேஷ்! மே 8ல் வெற்றியை கொண்டாட இல்லையே! பெற்றோர் கதறல்
பரமகுடி: சாலை விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவன் முகேஷ் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 483 மதிப்பெண்களை பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். நல்ல மார்க் வாங்கிய நிலையில் அதை கொண்டாட தனது மகன் இல்லையே என பெற்றோர் கண்ணீர் விடுகிறார்கள்.
தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
எத்தனை சதவீதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
துயரச் சம்பவம்
மாணவர்களும் கடந்த ஆண்டுகளை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு நேரத்தில் பல்வேறு துயர சம்பவங்கள் நடந்தன. பெற்றோர் இறந்த நிலையிலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேர்வு எழுத சென்ற கொடூர சம்பவங்களும் நடந்தன.
வள்ளியூர் அருகே
அந்த வகையில் வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் அவரிடம் ஆசி பெற்று விட்டு தேர்வு எழுதச் சென்ற மாணவன் சுனில்குமார் பிளஸ் 2 தேர்வில் 375 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அது போல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முகேஷ். இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பிளஸ் 2 தேர்வு
அவர் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் 483 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழில் 81 மதிப்பெண்களையும் ஆங்கிலத்தில் 86 மதிப்பெண்களையும் இயற்பியலில் 81 மதிப்பெண்களையும் வேதியியலில் 95 மதிப்பெண்களையும் கணினி அறிவியலில் 80 மதிப்பெண்களையும் கணிதத்தில் 60 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார்.
விபத்து
கடந்த 8ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது டிப்பர் லாரி மோதியதில் இவர் உயிரிழந்தார். இவருடைய பெற்றோர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் மகன் எங்களுக்கு துணையாக இருந்தார். இன்று இத்தனை மதிப்பெண்களை பெற்றுள்ளான். ஆனால் அதை கொண்டாட அவன் இல்லையே என கண்ணீர் விட்டு கதறினர். மாணவனின் தந்தையும் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
கரூர் மாவட்டம்
அது போல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவன் ஷியாம் சுந்தர் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் 351 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
ஷியாம் சுந்தர் தமிழில் 64 , ஆங்கிலத்தில் 48, பொருளாதாரத்தில் 58, வணிகவியலில் 61, கணக்கியலில் 43, கணினி பாடத்தில் 77 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
-
விஜய்யுடன் ரகசிய டீலா? பாஜக கூட்டணி பகீர் பேச்சு.. “பூனைக்குட்டி வந்துருச்சோ?” கோவையில் பரபரப்பு -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications