கம்யூட்டர் சயின்ஸ் மாணவிகளுக்கான லேப்டாப் எங்கே?- கலெக்டரிடம் பொங்கிய மாணவிகள்
நெல்லை: நெல்லையில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என மாணவிகள் காரசாரமாக புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுளளது.
தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிப்பதற்காக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் திரண்டனர்.

பின்னர் இது தொடர்பாக கலெக்டர் கருணாகரனிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். அதில் கூறியிருப்பதாவது, "பாளை குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழி கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழக அரசின் இலவச லேப்டாப் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. கம்யூட்டர் கல்விக்கு லேப்டாப் பயன்படும் என தெரிந்தும் இந்த மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஓதுக்கீடு வழங்குகிறது. ஆனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications