ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. முதற்கட்டமாக ரூ.325 கோடி உதவி: மோடி அறிவிப்பு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது. இதில் தமிழகத்திற்கு 280 கோடி வழங்கப்படும். தமிழகம் மற்றும் கேரளாவை பார்வையிட்ட பிரதமர் இந்த மோடி அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகம் மற்றும் கேரளாவை சில வாரங்களுக்கு முன்பு ஓகி புயல் தாக்கியது. இன்று இந்த புயலின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.

குமரி மாவட்டம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து மீனவர்களை சிலரை சந்தித்து பேசினார். காணாமல் போன மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக வீட்டிற்கு திரும்புவார்கள் என்று மோடி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு நிதி உதவி அறிவித்து இருக்கிறார். அதன்படி முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது.
மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சேதமடைந்த 1400 வீடுகள் சீரமைக்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளை சீரமைக்க 1.5 லட்சம் வழங்கப்படும். அதேபோல் இதில் மோசமாக காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் வரை வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications