For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தருகிறார்- பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தந்து வருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை விரைவில் முடிவடையும் என்று கூறினார்.

 Pon Radhakrishnan

ரயில்வே துறையில் தற்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை-மதுரை இரட்டை ரயில் பாதை பணி இந்த நிதியாண்டிற்குள் முடிவடையும். மேலும் தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரை-குமரி,குமரி-திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ.3940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தை தத்தெடுத்தது போன்று நரேந்திர மோடி புதிய திட்டங்களை தந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் சென்னை-குமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தரவேண்டும் என்றும் தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை திட்டத்தில், இணைந்து செயல்பட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

English summary
Union minister Pon Radhakrishnan has said that PM Narendra Modi has so many plans towards the growth of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X