தேர்தல் ரணகளத்திலும் குஷ்புவுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது தாயுடன் நேரம் செலவிட்டது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் குஜராத்தில் வசித்து வருகிறார். அவர் மோடியின் சகோதரரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து டெல்லி பக்கமே செல்லாத அவரின் தாய் முதல்முறையாக மகனின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு சென்றார்.

மோடி தனது தாய்க்கு வீட்டை சுற்றிக் காட்டியதுடன் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து தோட்டத்தையும் சுற்றிக்காட்டியுள்ளார். இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் தாய் குஜராத்திற்கு திரும்பிச் சென்றுவிட்டார். நீண்ட காலம் கழித்து அவருடன் நேரம் செலவிட்டேன். அவர் முதல் முறையாக ஆர்.சி.ஆருக்கு வந்தார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாம் எல்லாம் தாயை 365 நாட்களும் 24 மணிநேரமும் கவனித்துக் கொள்கிறோம்...திடீர் என தாய்ப்பாசம் வந்தால் இப்படித் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+