48 ஆண்டுகள் காங்கிரஸ் செய்யாததை 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது- மோடி பெருமிதம்
48 ஆண்டுகள் காங்கிரஸ் செய்யாததை 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

புதுவை: 48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போதிலும், 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஆரோவில் அருகே பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி அழகான ஊர் என தமிழில் பேச்சை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி சித்தர்கள், தெய்வீக மனிதர்கள் வாழும் பகுதியாகும். புதுச்சேரி நகரமாக, கிராமமாக இருக்கிறது. அரவிந்த் கோஷை ஆரத்தழுவி ஞானகுருவாக்கியது புதுச்சேரி. மகாகவி பாரதியாரை இதயப்பூர்வமாக வரவேற்றதால் தேசிய கவியாக பரிணமித்தார்.

காரைக்கால் மக்கள்
வாஞ்சிநாதனை வரவேற்ற பூமி புதுச்சேரி. புதுவை மக்கள் 2 சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றவர்கள். சுனாமிக்கு பின் காரைக்கால் மக்கள் எதிர்கொண்டது திறமையின் வெளிப்பாடு ஆகும்.

மண்ணுக்கு அநியாயம்
நாட்டு விடுதலைக்கான பத்திரிகைகள் புதுவையில் அச்சடிக்கப்பட்டன. புதுச்சேரி சரியான வளர்ச்சியை அடையவில்லை. புதுவை அரசு சரியாக செயல்படுகிறதா?.
புதுவை ஆட்சியாளர்கள் மண்ணுக்கு அநியாயம் விளைவித்திருக்கிறார்கள்.

முன்னேறுவதில் குறையை ஆராயுங்கள்
புதுவையில் ஒவ்வொரு ஆட்சியும் மக்கள் சக்தியை புரிந்து கொள்ளவில்லை. புதுச்சேரியின் வளர்ச்சியில் பல பத்தாண்டுகளாக தடை நீடிக்கிறது. நம்மோடு விடுதலை அடைந்த நாடுகள் நம்மைவிட வளர்ந்துள்ளன. நாம் முன்னேறுவதில் என்ன குறை என்பது குறித்து ஆராய வேண்டும்.

48 ஆண்டுகள் ஆட்சி
17 ஆண்டுகள் நேரு, 14 ஆண்டுகள் இந்திரா, ராஜீவ் 5 ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றது. நேரு, இந்திரா, ராஜிவைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடைபெற்றது. ஒரு குடும்பம் நேரடியாக அல்லது மறைமுகமாக 48 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது.

ஜவுளித்துறையில் ஒளிர்ந்தது
48 ஆண்டுகால ஆட்சியையும் நமது 48 மாத கால ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். 48 ஆண்டுகளில் அவர்களும் 48 மாதங்களில் நாமும் செய்தது என்ன என பாருங்கள். புதுவை ஒருகாலத்தில் ஜவுளித்துறை ஒளிர்ந்தது. புதுவையில் இருந்த கூட்டுறவு இயக்கம் ஒழிந்து போயிருக்கிறது. புதுச்சேரியில் போக்குவரத்துத் துறை நொடிந்து போயுள்ளது. கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதுவை காங். அரசால் தோல்வி அடைந்துள்ளது.

காங்கிரஸ் முதல்வர்
டெல்லியில் இருந்து கொண்டு ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள் காங்கிரஸ். புதுச்சேரி ஏன் வீழ்ந்தது என்பதை காங்கிரஸ் அரசு விளக்க வேண்டும். நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் அனுமதிக்க மறுப்பது என்ன ஜனநாயகம்? வடகிழக்கு, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுகள் வீட்டுக்கு போய்விடும். ஜூன் மாதத்துக்கு பிறகு நாட்டிலேயே ஒரே ஒரு காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமிதான்.

ஸ்மார்ட் சிட்டி
நாராயணசாமியை ஜூன் மாதத்துக்கு பின் தோளில் தூக்கி வைத்து கொள்ளும் காங்கிரஸ். சுற்றுலா, சுற்றுச் சூழல் சக்திகளை பயன்படுத்த வேண்டும். துவையில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் ஏன் நடைபெறவில்லை? பழமையும் பாரம்பரியமுமான புதிய புதுச்சேரி முன்னேற முடியும். மத்திய அரசு புதுவையை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்காக புதுவைக்கு ரூ1,800 கோடி செலவு செய்யப்படும் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications