ஆம் ஆத்மியில் இணைய நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்
சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.
டெல்லியில் ஆட்சியை பிடித்த கையோடு நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்தி வருகிறது ஆம் ஆத்மி. இதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பிரசாந்த் பூஷண் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தார்.

அப்போது கூடங்குளம் உதயகுமாரை நேரில் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். மேலும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவும் உதயகுமாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியில் இணைய சில நிபந்தனைகளை பிரசாந்த் பூஷணிடம் உதயகுமார் விதித்திருக்கிறார். தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற ஹிந்தி பெயரில் கட்சியை நடத்தாமல் சாதாரண மக்கள் கட்சி என்பது போல தமிழ் பெயருடன் கட்சி நடத்துதல், அணு உலை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்பதை விளக்க வேண்டும், ஈழம், மீனவர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், இந்திய கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு ஆகியவைதான் உதயகுமார் முன்வைத்த நிபந்தனைகள்.
மேலும் தற்போதைய ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாவுடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை என்றும் உதயகுமார் உறுதி அளித்திருக்கிறாராம்..
தேசிய கட்சிகளுக்கெல்லாம் நிபந்தனை விதித்த ஆம் ஆத்மிக்கே நிபந்தனையா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications