பாமக யாருடன் கூட்டணி? இந்தியாவின் பெயரை மாற்றணுமா? ராமதாஸ் சொன்ன பளிச் பதில்கள்!
கும்பகோணம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து செயற்குழு -பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியா பெயரே போதுமானது என்றும் பாரத் என்ற பெயர் தேவையில்லை என்று தான் தாம் கருதுவதாகவும் கூறியுள்ளார். கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்தியா என்றும் சொல்லலாம், பாரத் என்றும் சொல்லலாம் என இரண்டையும் சேர்த்துக் கூறினார்.
மேலும், ஒரு கட்டத்தில் முதலில் பெயர் குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி நழுவிக்கொண்டார். ஆனால் ராமதாஸ் அப்படியில்லை, இந்தியா பெயரே போதுமானது என பளிச் பதில் கொடுத்துள்ளார். இதன் மூலம் பாரத் என்ற பெயரை அவர் விரும்பவில்லை என்பது தெரியவருகிறது.
குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவது பற்றி கவலை தெரிவித்த ராமதாஸ், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு தாங்கள் போடும் மதிப்பெண் எவ்வளவு என்ற கேள்விக்கு, இன்னும் தாம் மதிப்பெண் போடவில்லை எனத் தெரிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை ராமதாஸ் உணர்த்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications