தாத்தா ஆனார் அன்புமணி.. கொள்ளு தாத்தா ராமதாஸ்.. மகளுக்கு இரட்டை குழந்தை.. பூரிப்பில் தொண்டர்கள்
அன்புமணி மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
Recommended Video

சென்னை: மகளுக்கு குழந்தைகள் பிறந்ததையடுத்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகி விட்டார்!! பாமக நிறுவனர் ராமதாஸ் கொள்ளு தாத்தாவாகி விட்டார்!!
அன்புமணி சௌமியா தம்பக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இயல்பாகவே குடும்பத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் அதீத பாசம் வைத்துள்ளவர் அன்புமணி. இதில் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், அன்புமணியின் சகோதரியின் மகன் ப்ரித்தீவனுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.
[ ஒரே இரவு மழை.. ஊட்டியாகிப்போன சென்னை.. ஏசி ஃபேன்களுக்கு லீவு.. ஜில் மோடில் மக்கள்!!! ]

அன்புமணியின் கருகரு தாடி
இந்நிலையில் எப்போதும் ஸ்மார்ட் லுக்குடனும் மழ மழ முகத்துடனும் ஜம்மென்று இருக்கும் அன்புமணி சில மாதங்களாக தாடி வைத்திருந்தார். கருகருவென வளர்ந்த தாடியின் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் நேரிடையாகவே கேட்டுவிட்டனர்.

மகளுக்காக தாடி
அதற்கு அன்புமணி, "மகள் சம்யுக்தா கர்ப்பமாக இருப்பதால், விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. நல்லபடியாக என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு தாடி வளர்க்கிறேன்" என்று சொன்னதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர் மட்டுமில்லை, இவரது மருமகன் ப்ரித்தீவனும் தாடியை வளர்த்தார்.

இரட்டை குழந்தைகள்
இந்நிலையில், நேற்று அன்புமணியின் மகளுக்கு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளு தாத்தா ராமதாஸ்
மருத்துவமனை முழுவதும் எல்லோருக்கும் ஸ்வீட் வழங்கப்பட்டு மகிழ்ந்தனர். இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். கொள்ளு தாத்தா ஆகிவிட்ட ராமதாஸ் மிக்க மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications