தொடங்கியது பாஜக- பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை - 2 நாளில் இறுதி முடிவு: ஜி.கே. மணி தகவல்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று அறிவித்தது பா.ம.க. அத்துடன் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருந்தது பா.ம.க. பின்னர் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை பாமக மேற்கொண்டது. இதில் பெரும் இழுபறியே நீடித்து வந்தது. பாமக அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டியது.

பின்னர் ஒருவழியாக ஒருசில தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவையும் நேற்று அமைத்தது பா.ம.க.
இதைத் தொடர்ந்து பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் கட்ட அதிகாரப்பூர்வமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியது. பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் பாமகவின் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பாஜகவின் இல. கணேசன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பாமகவுடன் தற்போது பூர்வாங்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications