சொந்த தொகுதியில் போட்டியிட தைரியமில்லாத விஜயகாந்த்... பாமக வேட்பாளர் வக்கீல் பாலு தாக்கு
சென்னை: சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு முறையும் தொகுதி மாறும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது சொந்த தொகுதியில் போட்டியிட தைரியமில்லை என்று உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு இன்று தனது வேட்புமனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாலு, அதிமுகவும், திமுகவும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறினார். இந்த தொகுதியில் குளங்களும், ஏரிகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஏரி, குளங்களை தூர்வாரி பராமரித்து விவசாயத்தை மீண்டும் மலரச்செய்வேன் என்று கூறினார்.

ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் என்று கூறிய பாலு, இந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவது ஏன்று கேள்வி எழுப்பினார்.
விஜயகாந்த் ஒவ்வொரு முறையும் தொகுதி மாறுகிறார். முதலில் விருதாச்சலத்தில் போட்டியிட்டார், கடந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த நன்மையும் அவர் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு செய்யவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த், ஒருமுறை கூட தொகுதி மக்களுக்காக கேள்வி கேட்கவில்லை.
விஜயகாந்துக்கும் உடுமலைப் பேட்டை தொகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜயகாந்த் பிறந்த தொகுதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளது. அவரது வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பிறந்த ஊர் குடியாத்தம் தொகுதியில் உள்ளது.
இந்த தொகுதிகளில் எல்லாம் போட்டியிடாமல் அவர் ஏன் உளுந்தூர் பேட்டை தொகுதியை தேர்வு செய்தார். இம்முறை அவருக்கு யாரும் ஓட்டு போடமாட்டார்கள். விஜயகாந்த் தோல்வியடைவது உறுதி என்று கூறினார்.
இதேபோல உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் இன்று மனுதாக்கல் செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications