பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஏன் கூட்டுகிறீர்கள்? மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை: பெட்ரோல், டீசல் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ள போதிலும், இந்திய மக்கள் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்துள்ளது என்று குற்றச்சாட்டியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், அந்த வரியை குறைக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் வரிகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.56 குறைந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை ரூ.2.44 குறைந்து ரூ.51.34 ஆகவும் உள்ளது. கடந்த 4 மாதங்களில் பெட்ரோல் விலை 9 முறையும், டீசல் விலை 5 முறையும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்படுவது வருத்தமளிக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 வரை குறைந்திருக்கும். கலால் வரி உயர்வின் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் முழுமையான பயன்களை மக்களால் அனுபவிக்க முடியவில்லை.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு ரூ. 7.75 &ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6.50 &ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.78,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ஆனால், மக்களுக்கு இதே அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை 4.1% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் தான் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான விலைகளை உயர்த்த வேண்டுமா? என்று மத்திய அரசு ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை கொடுத்த மக்களுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன்களை அனுபவிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை ரத்து செய்துவிட்டு, கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications