திருப்பூர் போலீஸ் தடியடி.. வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட் உத்தரவு
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பியை பணி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மண்டை உடைப்பு
மேலும், போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்தது.

பாமக வழக்கு
இந்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது குறித்து விசாரிக்க பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

டாஸ்மாக் எதிர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், நெடுஞ்சாலையில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திறக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் என்ற குறிப்பிட்டார்.

பணி நீக்கம் செய்
மேலும், போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக ஏடிஎஸ்பி பாண்டியராஜன் நடந்து கொண்டார். அவரி பணி நீக்கம் செய்ய வேண்டும். போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

டிராபிக் ராமசாமி மனு
இந்த வழக்கில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சூர்யா ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அவசர வழக்கு
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிற்பகல் 2 மணியளவில் விசாரணை தொடங்கியது.

அரசு தரப்பு வாதம்
அப்போது, சாமளாபுரத்தில் லேசான தடியடிதான் நடத்தப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் கூறினார். மேலும், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாமளாபுர மதுக்கடையை மூட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு செலவில் சிகிச்சை
இதனைத் தொடர்ந்து, மதுக்கடைகளை இடம் மாற்றம் செய்யும் போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு முடிப்பு
பெண்ணை அடித்த ஏடிஎஸ்பி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பதாலும், மதுக்கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாலும் நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications