தமிழக அரசியலில் பாமகதான் 3வது அணி - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்
நெல்லை: தமிழக அரசியல் களத்தில் நாங்கள்தான் மூன்றாவது அணி என்று பாமக முதல்வர் வேட்பாளாரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பங்கேற்றார். இதில் நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய அவர், ‘'மக்கள் நலக்கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த அணிக்கு கொள்கை, கோட்பாடு போன்றவை கிடையாது. தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது அணி. எதிர்க்கட்சித் தலைவராகவே தேமுதிக தலைவர் விஜயகாந்தால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
அப்படியிருக்கையில் அவரை முதல்வர் வேட்பாளர் என்பது சரியானதல்ல. விஜயகாந்த் முதல்வராக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். விஜயகாந்தால் சிறந்த எதிர்கட்சி தலைவராக செயல்பட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் நாங்கள் தான் 3வது அணி. மக்கள் நல கூட்டணியால் ஒரு தொகுதி கூட வெற்றிபெற முடியாது.
பா.ம.க. தன்னம்பிக்கை மிகுந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது செயல்திட்டங்களை மக்களிடம் தெரிவித்து வருகிறோம். மண்டல மாநாடு, மாநில மாநாடு போன்றவற்றோடு நின்றுவிடாமல் மக்களோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications