தமிழிசையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்
தமிழிசையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாமக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே மணி அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸையும், அக்கட்சி தொண்டர்களையும் விமர்சித்து இருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள் நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாப்பதற்காக 1950ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் 1987ம் ஆண்டு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டம் தான்.
அந்தப் போராட்டம் தான் தமிழகத்திலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற மிகப்பெரிய உரிமையை பெற்றுக் கொடுத்தது. அந்தப் போராட்டத்தில் 21 பேர் தங்களின் உயிர்களை தியாகம் செய்தனர்.
இந்த சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மன்னிப்புக் கோர வலியுறுத்தி தமிழக அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை பாமக சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications