அரசு பஸ்கள் நஷ்டத்தில் ஓட காரணம் ஊழல்தான்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து கழகத்தில் ஊழல் காரணமாகவே நஷ்டத்தில் இயங்குவதாக அன்புமணி குற்றம் சாட்டினார்.
Recommended Video

சென்னை: அரசு போக்குவரத்து கழக்கத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழியர்களை நியமித்த காரணத்தினாலே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
வட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகி கள் தெரிவித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட் டம் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

பாமக தொண்டர்கள் முழக்கம்
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அன்புமணி ராமாதாஸ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

லஞ்சம் வாங்கி பணி
செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும் போது அரசு பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன் என்று கேட்டார். அரசு போக்குவரத்து கழகத்தில் 90 ஆயிரம் பேர் மட்டுமே தேவைப்படும் பணிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளனர். லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்துள்ளனர். அதிமுக மட்டுமல்ல திமுக காலத்திலும் ஊழல் நடந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அரசுக்கு எதிராக முழக்கம்
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்திலும், ஜி.கே.மணி தலைமையில் திண்டிவனத்தி லும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல் அந்தந்த மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications