விவசாயிகள் தற்கொலை… பச்சை துரோகம் செய்த பாஜக.. அன்புமணி காட்டம்
விவசாயிகள் தற்கொலை, தமிழ்நாட்டில் வறட்சி என தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் பாஜக அரசு வேடிக்கை பார்த்து தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது பாஜக அரசு என்று அன்புமணி ராமதாஸ் கூறி
கும்பகோணம்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோணத்தில் இன்று பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
விவசாயிகள் தொடர்பான போராட்டம் என்பது அரசியல் போராட்டம் இல்லை. இது விவசாயிகளின் உயிர் பிரச்சனை. தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கூலிகளுக்கு ஒரு தவணையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதனை உடனடியாக செய்ய வேண்டும்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மிக மிக அவசியம். உச்சநீதிமன்றம் வழங்கிய நல்ல வாய்ப்பை மத்திய அரசு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. இதில் பச்சை துரோகம் செய்தது மோடி அரசு. இது மன்னிக்க முடியாத துரோகம்.
50 எம்பிக்களை வைத்திருக்கும் அதிமுக, காவிரி மற்றும் விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டு நிற்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications