இலங்கை போர் குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா.வில் தாக்கல் ஆவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் ராமதாஸ்
சென்னை: இலங்கை மீதான போர் குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் ஆவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28-வது கூட்டத்தில் மார்ச் 25-ந் தேதி இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் தாக்கல் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போடும் செயல்களில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன ஈடுபட்டிருக்கிறார்.
இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டை ராஜபக்சேவை விட சிறிசேன தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இலங்கைப் பிரச்சினையை அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் கிட்டத்தட்ட கைகழுவி விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே உள்ளது.
எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 25-ந் தேதி மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா தான் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications