ஜெயலலிதா ஆட்சியில் தமிழக வளர்ச்சி 4.2% ஆக சரிவு, உருப்படுமா?: ராமதாஸ்
ஆற்காடு: தேர்தலில் ஓட்டு வாங்க ஊழல் செய்த பணத்தை கொண்டு வந்து கொடுப்பார்கள். எனவே யாரும் பணம் வாங்காதீர்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அரக்கோணம் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் ஆர்.வேலுவை ஆதரித்து ஆற்காட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு ஜெயில் தண்டனை என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். ஊழல் செய்த பணத்தை எடுத்து வந்து கொடுத்தால் வாங்க கூடாது. வியாபாரம், திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணத்தை எடுத்து சென்றால் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அதை பறிமுதல் செய்கின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. அவரது அரசியல் வாழ்க்கை முடியப்போகிறது. அதற்கு தான் சொத்து குவிப்பு வழக்கில் 17 ஆண்டு காலமாக வாய்தா வாங்கி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் வளர்ச்சி 4.2 சதவீதமாக உள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் 7.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1.9 சதவீதம் விவசாய வளர்ச்சி இருந்தது. தற்போது மைனஸ் 12 சதவீதமாக பின் தங்கி உள்ளது. டாஸ்மாக் விற்பனையை உயர்த்துவது பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
யாருடன் கூட்டணி?
கூட்டணியில் உள்ள மதிமுகவினர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் பிரதான கூட்டணி கட்சியான பாஜ, தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ் உட்பட பாமக நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுகவை தாக்கி பேசினர். அதேசமயம் கூட்டணி கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குறித்து கடைசி வரை கூறவேயில்லை.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications