தீர்ப்பு எதிரொலி- சிதம்பரம் தீட்சிதர்கள் கொண்டாட்டம்! தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகித்து வருகிறது. இதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் போனது சிதம்பரம் நடராஜர் கோயில்.

இத்தீர்ப்பு வெளியானதையடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜன் தலைமையில் கோயிலுக்குள் வெடி, வெடித்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதேபோன்று இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும் கீழசன்னதியில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தீர்ப்பைக் கண்டித்து போராட்டம்
அதே நேரத்தில் இத் தீர்ப்பை எதிர்த்து தீர்ப்பை சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணியினர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications