தமிழனின் மூச்சுக்காற்றில் எரிந்து போவீர்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் குறித்து எழுத்தாளர் லதா சரவணன் எழுதிய கவிதை.
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் குறித்து எழுத்தாளர் லதா சரவணன் எழுதிய கவிதை.
- லதா சரவணன்
வாடி வாசல் காத்திருக்கிறது
கொப்பளிப்பது குருதியெனினும்
பாராம்பரியத்தின் பாதிப்பென
வீரத்தழும்பினை வெறி கொண்டு
ஏற்கும் வீரியத்தை குறைபேசிட வந்தாயோ

நீ ஆயிரம் முறை அழித்தாலும்
மண்ணில் புதைத்தாலும்,
நெருப்பில் சுட்டாலும்
பீனிக்ஸ் பறவையாய் மீட்சித்து
வரும் தமிழினம் நாங்கள்
வந்தாரை வாழவைப்போம்
எங்கள் பண்பை இகழ்ந்தால் ......
அதற்கும் பதிலடிகொடுப்போம்.
இருள் கிழித்து வரும்
ஒளியைப்போல சீறி வரும்
காளை பார்க்காமல் சிலிர்த்து எழும்
எங்கள் இளங்காளைகளின் வேகத்தைத் தடைபோட
இங்கு எத்தனை ஆசாமிகள்
வெறும் சூடம் ஏற்றி உங்களை வழிபட்டுக்கொண்டே இருக்கத்தான் தமிழர்களா
நீரில், நிலத்தில், மின்சாரத்தில்,
இன்னும் காற்றில் மட்டும்தான்
தமிழனை ஏமாற்றவில்லை, தரம் பிரிக்கவில்லை
எங்களின் பொறுமையும், அகிம்சையும்
உங்களுக்கு சாவிகொடுத்த பொம்மைகளின் சாகசமாக தெரிகிறதா?
சர்க்கஸ் கோமாளி இல்லை தமிழன்.....
நீ எள்ளி நகையாட
எதிர்க்கத் திராணியில்லாத பூச்சிகள் இல்லை
கொத்துக்கொத்தாக உயிர்கொடுக்க...........!
இதோ வீறு கொண்டு எழுந்துவிட்டான்
இளைஞன் கதிர் அரிவாள் கொண்டு தலைசீவிட
நெற்கதிர்கள் பாதையில் இரத்தத்தை பீய்ச்சிய உழவனின் மகன்.......
பீட்டா வீசும் பிச்சைக்கு நீ அடிபணியலாம்
சாதி இன மதம் கடந்து களம் கண்டிருக்கும்
எம் தமிழனின் மூச்சுக்காற்றில் எரிந்துபோவீர்கள்!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications