கருணாநிதி 30.. மெரீனாவில் கவிதை மழை.. கருணாநிதிக்கு கவிதாஞ்சலி!
கருணாநிதிக்கு கவிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
Recommended Video

சென்னை: மறைந்த கருணாநிதிக்கு கவிஞர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறந்து இன்றோடு 30 நாள் ஆகிறது. ஒரு மாதம் ஆன நிலையில் அவரை நினைவு கூறும்வகையில் கவிஞர்கள் அனைவரும் ஒன்று கூடி அவருக்கு புகழ்பாட உள்ளனர்.
இதற்காக கவிதாஞ்சலி நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடந்து வருகிறது. இன்று முழுவதும் கவிதை வாசித்து முத்தமிழ் அறிஞருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

கிட்டத்தட்ட ஆயிரம் கவிஞர்கள் ஒன்றுகூடி உள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து கவிதை வாசித்து தங்கள் வணக்கங்களை தெரிவிக்க உள்ளனர். தொடர்ந்து 12 மணி நேரம் மெரினாவில் ஒரே கவிதை மழைதான் பொழிய போகிறது.

இந்த கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னாள் மேயரும் எம்எல்ஏ-வுமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு காலை 7 மணிக்கு 100 கவிஞர்கள் கருணாநிதி சமாதிக்கு சென்று கவிதை பாடிவிட்டு வந்தார்கள்.












Click it and Unblock the Notifications