ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் 21 மணி நேரம் விடிய விடிய போராட்டம்- இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேரம் விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரி மதுரை அருகே அலங்காநல்லூரில் விடிய விடிய 2-வது நாளாக போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதனால் அலங்காநல்லூரில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
அலங்காநல்லூரில் நேற்று காலையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அமைதிவழி போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் இணைந்து கொண்டனர்.

இப்போராட்டத்தை நேற்று மாலை 5 மணிக்கே முடித்துக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இது தொடர்பாக வாடிப்பட்டி தாசில்தார் ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் மாணவர்கள் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இதனால் பெரும் பதற்றம் நீடித்தது. இப்போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்களுக்கு கிராம மக்கள் உணவு கொடுத்தனர்.
21 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் இன்று காலையிலும் தொடர்ந்தது. காலை 6 மணியைத் தாண்டியும் போராட்டம் நீடித்த நிலையில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு மைதானம் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக கூடியுள்ள நீங்கள் உடனே இங்கே இருந்து வெளியேற வேண்டும் என தாசில்தார் மீண்டும் ஒலிபெருக்கியில் எச்சரித்தார்.
அத்துடன் 10 நிமிடத்தில் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீஸ் படை எச்சரித்திருந்தது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இதை ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றி தரத்தரவென இழுத்து சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications