ஈசிஆர் விவகாரம்.. தனியார் கல்லூரி மாணவர் கைது.. 2 கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரினை விரட்டிச் சென்று, மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வீடியோவில் இருந்த இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதாக விமர்சித்தனர்.

இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், முட்டுக்காடு அருகே வந்த போது இளைஞர்கள் 7,8 பேர் இரு கார்களில் வந்து எங்களை வழிமறித்து பிரச்சனை செய்தனர். அப்போது காரை நிறுத்தாமல் நாங்கள் சென்ற போது, வீட்டின் அருகே வந்து காரினை நிறுத்தினர்.
அப்போது நாங்கள் அவர்களின் காரினை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக பிரச்சனை செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களின் காரினை இடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்டதால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.
அதேபோல் ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஏற்கனவே வெளியான வீடியோவில் இளைஞர்களின் முகம் தெளிவாக தெரிந்திருந்ததால், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று கார்களின் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்த ஒரு காரினையும், பொத்தேரியில் இருந்த மற்றொரு காரினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் இளைஞர் ஒருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில் விசாரணையின் முடிவில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்பின் மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications