காம்ப்ளானில் வண்டு.. வேடசந்தூர் மருந்து கடையில் ஆய்வு செய்த அதிகாரியை தாக்கிய 3 பேர் கைது!
வேடசந்தூர்: வேடசந்தூரில் காம்ப்ளானில் வண்டு இருந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மருந்து கடை ஒன்றில் ஆய்வு செய்த அரசு அதிகாரியைத் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை நியமன அலுவலரான சாம்இளங்கோவிடம் கிட்டயகவுண்டன்பட்டியை சேர்ந்த மயில்வாகனன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், வேடசந்தூரில் வடமதுரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் காம்ப்ளான் பாக்கெட் வாங்கியதாகவும் அதில் வண்டுகள், பூச்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட மருந்து கடையில் பரிசோதனை செய்ய அதிகாரி சாம்இளங்கோ மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது கடை உரிமையாளர் அங்கு இல்லை.
பின்னர் ஆய்வு செய்ய இருப்பதால் கடையின் ஷட்டரை இறக்கி விடுமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கடை ஊழியர்கள் உரிமையாளிடம் செல்போனில் பேசினர். உடனடியாக உரிமையாளர் மாணிக்கம், அவரது மகன் தங்கராஜ் ஆகியோர் கடைக்கு வந்தனர்.
அவர்கள் அதிகாரிகளை பரிசோதனை செய்ய விடாமல் தடுத்து தாக்கினர். இதையடுத்து அரசு அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அதிகாரிகளை மீட்டுச்சென்றனர்.
பின்னர் அரசு அதிகாரிகளைத் தாக்கியதாக கடை உரிமையாளர் மாணிக்கத்தின் உறவினர்கள் தங்கராஜ், தண்டபாணி, சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications