போயஸ் தோட்டத்தில் நள்ளிரவில் சசிகலா முன்பு சங்கு ஊதியவர்கள் கைது
சசிகலாவை வாழ்த்துவது போல சென்று நள்ளிரவில் சங்கு ஊதி எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் உள்ள ஆளுநர் சென்னை திரும்பிய உடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. சசிகலா முதல்வராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு முன்பாக சங்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 10 பேர், போயஸ் கார்டன் சென்றுள்ளனர். தடுப்பு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நுழைந்தபோது, சசிகலா புகழைப்பாடி சென்றனர். சின்னம்மா வாழ்க என்று கோஷமிட்டு சென்றதால் காவலுக்கு இருந்த போலீசாரும் அனுமதித்துள்ளனர்.

போயஸ் தோட்டத்தின் அருகே சென்று, வேதா நிலையம் முன்பாக நின்ற அவர்கள் தங்களின் பையில் மறைத்துவைத்திருந்த சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பால்கனியில் நின்று இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சசிகலா அதிர்ச்சியடைந்தார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலா முன்பு சங்கு ஊதிய 5 பேர் கைது
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 7, 2017
# ஏன்டாப்பா போயஸ் கார்டன் என்ன சுடுகாடா...? pic.twitter.com/tANDKB4Y4T
உடனே ஓடிவந்த காவலர்கள் சங்கு ஊதியவர்களைக் கைது செய்தனர். சசிகலா முன்பு சங்கு ஊதிய அனைவரும் தற்போது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications