போலீஸ் வண்டி மேலேயே விஜயகாந்த் போஸ்டரா.. "அண்ணனின் அடி விழுதுகள்" மீது வழக்கு!
சென்னை: சென்னையில் காவல் நிலையத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் வாழ்தது போஸ்டரை ஒட்டியதால் டென்ஷனான போலீஸார், இதுதொடர்பாக தேமுதிகவினர் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேமுதிகவினர் போஸ்டர்கள் ஒட்டியும், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று இரவு மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது தேமுதிகவினர் போஸ்டரை ஒட்டி விட்டனர். இன்று காலை வந்த போலீஸார் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனற். இதையடுத்து போஸ்டரை ஒட்டியது யார் என்று விசாரித்தனர். அதில் தேமுதிகவைச் சேர்ந்த எழுமலை மற்றும் கமலக்கண்ணன்தான் இதைச் செய்ததாக தெரிய வந்தது.
இதையடுத்து அனுமதியில்லாமல் போஸ்டர் ஒட்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இது மிகச் சாதாரண பிரிவுதான். கைதானதும் சொந்த ஜாமீனிலேயே விடுதலையாகி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications